Sunday, 23 March 2014

திசை மாறிய துணிச்சல்கள்

புள்ளி விவரங்களின் படி 2012 ஆம் ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான தற்கொலைகள் பதிவாகி உள்ளன.இந்த எண்ணிக்கை மொத்தமுமே கூட வெறும் செய்தியாய் பார்ப்பவர்க்கும் கேட்பவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்குவதில்லை.தங்களுக்கு மிகவும் வேண்டியவர்கள் இதில் ஒருவரை இருந்திருந்தால் யாருக்குமே அந்த ஒன்று ஏற்படுத்தும் பாதிப்பே போதுமானது.தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்ற ஒரு கண்ணோட்டம் உள்ளது.என்னை பொறுத்தவரை அதற்கு பெரிய துணிச்சல் வேண்டும்.அவர்கள் பெரிய துணிச்சல்காரர்கள்.தங்களை சுற்றி உள்ளவர்களை பற்றி நினைக்காத மிகவும் பெரிய சுயநலவாதிகளும் கூட.இந்த உலகத்தில் தங்களுகென்று எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்று மனதில் பதித்து கொண்ட முட்டாள்கள்.வாழ்க்கை என்னும் பாதையில் பொறுமையாக கடந்து அனுபவிப்பதை தவிர்த்து ஓடிச்சென்று முதலில் எல்லையை தொட்ட அவசரக்காரர்கள்.
இந்த உலகம் தனக்கு அளித்த சுகங்களை மறந்து துக்கங்களை மட்டுமே நினைவில் வைத்து தன் மீது அன்பு கொண்டவர்களுக்கு நீங்கா துயரத்தை அளித்து விட்டு சென்றுவிடுகிறார்கள்.அவர்கள் மீது அன்பு கொண்ட அனைவரும் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.”அந்த விஷயத்துக்கு திட்டி எம்மகனையே இல்லாம பண்ணிட்டனே” என்று பெற்றோரும்,”அவனுக்கு அப்ப உதவியிருந்தா பரவால்லையே”என்று நண்பர்களும் தங்களை தாங்களே குற்றவாளிகள் ஆக்கி கொள்கிறார்கள்.
நெருக்கமானவர்கள் அவர்களை நினைத்து பார்த்து வருந்தாத நாட்கள் அரிதினும் அரிது."எதாவது செஞ்சி இங்க இருக்கறதுக்கு ஒரு பிடிப்பை உண்டாக்கி இருக்கலாம்,நம்ம கூட இருந்த சந்தோஷ தருணங்களை எல்லாம் மறந்து விட்டு போவதற்கு எப்படி மனசு வந்துச்சி” என்று சொல்லி நாலு வார்த்தை அசிங்கமாக கூட திட்டுவார்கள்.என்ன இருந்தாலும் அவன் நண்பன் தானல்லவா.அவர்கள் இருந்த குழுவில் அவர்களுடன் செய்த எந்த வேலையை செய்தாலும் அவர்களின் நினைவுகள் நிழலாடும்.அவர்கள் இருந்தால் இந்த இடத்தில் இப்படி பேசி இருப்பார்கள்,இப்படி செய்திருப்பார்கள் என்று கற்பனைகள் நீளும்.அவர்களை பொறுத்த வரை இந்த முட்டாள்தனமான துணிச்சல்காரர்கள் எங்கோ வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.சிலவற்றை மறக்க வைக்கும் சக்தி காலத்திற்கும் இல்லை,