Friday, 15 August 2014

சுதந்திர தினமாம்

கைப்பேசி தொலைத்து ஒரு மாதம் கழித்து என்னடா ஆச்சுஎன்று அக்கறையாய் கேட்ட நண்பர்களின்  வேண்டுகோளுக்கு இணங்கவும்,”நல்ல வேல இவன் தொல்லை பன்னலஎன்று நிம்மதியாய் இருந்த நண்பர்களின் நிம்மதியை குலைக்கவும் முடிவு செய்து வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் லேப்டாப்பில் whatsapp பதிவிறக்கம் செய்து ஆரம்பிச்சா கடந்த ஒரு மாசத்துல சில  மெசேஜ் வந்திருக்கிறது. என்னுடைய நண்பர்களின் தொடர்பு எண்கள் அனைத்தும் கைப்பேசி உடன் சேர்ந்து எதோ வண்டியின் சக்கரத்தின் அடியில்  நொறுங்கி விட்டது. நம்மளையும் நலம் விசாரிச்ச அந்த நல்ல உள்ளங்கள் யாருன்னு தெரில,சரி அவிங்க மூஞ்சிய பார்த்தாவது கண்டுபுடிக்க்கலாம்னு பார்த்தா சொல்லி வெச்ச மாதிரி பயபுள்ளைங்க எல்லாரும் தேசியக்கொடிய போட்டோவா வெச்சிருக்கறாங்க.கேட்டா சுதந்திர தின காய்ச்சல் ஆம்.இப்பதிக்கு தேசியக்கொடிய போட்டோவா வெச்சிகுரதுதான் டிரென்ட் ஆம். இவ்ளோ தேசபக்திய எங்க ஒளிச்சு வெச்சிருந்தாங்க தெரில.
இப்படிதானா நாம் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் ??
சின்ன வயசுல இருந்தே ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இதே கேள்வியை நான் கடந்து வந்திருக்கிறேன். எதாவது ஒரு தளத்தில் யாராவது ஒருவர் இந்த கேள்வியை எழுப்புவதை கடந்து வந்திருக்கிறேன்.சில வருடங்கள் முன்பு வரை அது தொலைக்காட்சியில் வரும் சிறப்பு திரைப்படங்களை கேள்வி கேட்டபடி இருந்தது.அப்பொழுதாவது பள்ளிக்கு கட்டாயம் கூப்பிடுவர்கள் கொடி  ஏற்றத்திற்கு. நாமும் நாட்டுப்பற்றுடன்(?) சென்று வந்தோம். இந்த வருடம் அனைவரும் தங்களது கைப்பேசியிலேயே கொடிஏற்றி விட்டனர். 'இதற்குத்தானா சுதந்திரம்?'என்று கேள்வி எழுப்பியவர்கள் யாரும் இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிடாததால் நாமும் சிறப்பு திரைப்படங்கள் பார்ப்பதுடன் சரி. இதுவரைக்கும் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நாளை கொண்டாட  என்ன செய்ய வேண்டும் என்று விளங்கவில்லை. இந்த சுதந்திரதினம் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருகிறது. வெள்ளிகிழமை வருவதால் மக்களுக்கு  நீண்ட வாரக்கடைசி.தொலைவில் இருப்பவர்கள் தத்தம் வீடுகளுக்கு  சென்று வருவதற்கு ஒரு வாய்ப்பு. இதை தவிர நான் கவனித்தது சமூக வலைதளங்களில் எனது நண்பர்கள் கும்பல்களில் ஒரு போக்கு(trend) தெரிகிறதுஅது  தங்களது Display picture – ஐ தேசிய கொடியாய் மாற்றுவது.
     கடந்த ஒரு மாதமாக மொபைலில் மட்டுமே facebook-ஐ பார்ப்பதால் எனது நண்பர்களின்  நிலைதகவல் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே  தெரிந்தது.நான் பின்தொடரும் பக்கங்களின் தகவல்கள் எதுவும் ஊடாக வரவில்லை.நண்பர்கள் எல்லோரின் நிலைதகவல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு விஷயத்தையே சுற்றி கொண்டிருக்கிறது.இவர்கள் ஒரே தலைப்பில் பேசி பேசி சலித்து விட கூடாது என்பதற்கு ஏற்றவாறே அமைத்தது போல நமது விழாக்களும் அமைகின்றன. சமீபத்தில்  ரமலானில் ஆரம்பித்து நண்பர்கள் தினம், ரக்ஷாபந்தன்சுதந்திரதினம்கிருஷ்ணஜெயந்திவிநாயகர்சதுர்த்திநவராத்திரிவிஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ்புத்தாண்டுபொங்கல்.என்று நீண்டு கொஞ்சம் இடைவெளி விடுகிறது. இத்தனை வருடங்கள் இவை அனைத்தையும் கொண்டாடினார்களோ இல்லையோ நேரில் வாழ்த்து சொல்லிருபார்களோ இல்லையோ தெரியவில்லை, அனால் சமூக தளங்களில் ஒரு இடுகை இடுதல் கட்டாயமாக பின்பற்ற படும். அந்த போக்கிற்கு ஏற்றபடி புகைப்படங்கள் மாற்றப்படும். இதே சமூக தளங்களின் உதவியோடு உலகில் சமீபத்தில்  புரட்சிகள் அரங்கேற்றி உள்ளனர்.பல சமூக மாற்றங்கள் நடத்தி காட்டி உள்ளனர்  நாம் செய்வது Trend கடைபிடிப்பதே.எப்படி எல்லா விழாக்களுக்கும் ஏற்றமாதிரி புகைப்படங்களை மாற்றுவது ஒரு போக்கோ, அதை கடைப்பிடிப்பவர்களை கலாய்ப்பதும் ஒரு போக்கே.நான் அந்த போக்கை பின்பற்றுகிறேன். நாங்களும் trend follow பண்ணுவோம்ல.
    


No comments:

Post a Comment